தனது திரைப் பயணத்தில் தேசிய விருதுகள் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் அனுபவங்களை நடிகர் தனுஷ் பகிர்ந்துள்ளார். 'அது ஒரு கனா காலம்' திரைப்படம் வெளியானபோது தான் மிகவும் இளம் வயதினராக இருந்ததாகவும், அந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அது கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து புதுப்பேட்டை, 3, மயக்கம் என்ன, மரியான், ராஞ்சனா மற்றும் வடசென்னை ஆகிய படங்களுக்கும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டும், அவை கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
சில விஷயங்கள் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் தானாகவே அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட தனுஷ், இந்த முறை தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு தமிழனாக தனக்கு மேலும் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 'தட்டிவிடாதீர்கள், என்னை தட்டிக்கொடுங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்




