ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் பிராண்ட் மதிப்பு குறித்த தரவுகளை ஹூலிஹான் லோகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் பிராண்ட் மதிப்பு 20.6 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1.97 லட்சம் கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது.
அணிகளின் தனிப்பட்ட பிராண்ட் மதிப்பில் 312 மில்லியன் டாலர் (ரூ.2,985 கோடி) மதிப்புடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது.
300 மில்லியன் டாலருக்கும் மேல் பிராண்ட் மதிப்பு கொண்ட முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை இந்த அணி பெற்றுள்ளது.
அடுத்தடுத்த இடங்களில்
மும்பை இந்தியன்ஸ் (264 மில்லியன் டாலர்),
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (245 மில்லியன் டாலர்),
சென்னை சூப்பர் கிங்ஸ் (244 மில்லியன் டாலர்) மற்றும்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (168 மில்லியன் டாலர்) ஆகிய அணிகள் உள்ளன.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்


