சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களை நோக்கி உட்பகுதிகளில் இருந்து கியூமுலோநிம்பஸ் (Cumulonimbus) மேகங்கள் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மேகக் கூட்டங்களின் நகர்வால் இப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேடார் தரவுகளின்படி, திருத்தணி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மேகங்கள் திரண்டு காணப்படுகின்றன. இந்த மேகங்கள் தொடர்ந்து நகர்ந்து வருவதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



