அரியலூர் ரயில்வே கேட் அருகே தொழிலாளி சடலம் மீட்பு

அரியலூர் ரயில்வே கேட் அருகே கட்டுமான தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணவேல்ராஜ் (48) என்பவரே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் டவுன் காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் தின்னர் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
