மீன்சுறுட்டி காவல் நிலைய எல்லையில் கஞ்சா கடத்திய இருவர் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுறுட்டி காவல் நிலைய எல்லைக்குள் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த இருவர், Drive Against Drugs (DAD) நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 16 கிலோ கஞ்சா மற்றும் அந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
