சென்னையில் ஆகஸ்ட் 8-ம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 8, 2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டை திருத்தங்கள், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். சேவைகளைப் பெற பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுடன் கூடிய கடவுச்சொல் (OTP) அவசியம் என்பதால், குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைபேசியுடன் நேரில் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செய்தி மூலம்: Government of Tamil Nadu - Press Releases
