உலக சதுரங்க தினம்: முதல்வர் விஜய் வாழ்த்து
உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு, இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கிய தமிழகத்தின் சாதனையைப் பாராட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு, முதல்வர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சதுரங்கத்தை நேசிக்கும் அனைவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழகம் சாதனை படைத்து வருகிறது.
உலகளாவிய போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த இளம் கிராண்ட் மாஸ்டர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இளைய தலைமுறையினர் அனைவரும் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
