ETN News சமீபத்திய அப்டேட்கள்
Chennai · education

தட்டச்சு பயிலகங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜூலை 23 வரை கால அவகாசம்

தமிழகத்தில் வணிகவியல் பயிலகங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தட்டச்சு பயிலகங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜூலை 23 வரை கால அவகாசம்

தமிழகத்தில் வணிகவியல் பயிலகங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

2026, 2027-ம் ஆண்டுகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்க இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் பல பயிலகங்கள் இன்னும் விண்ணப்பிக்காததால், இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்