ETN News சமீபத்திய அப்டேட்கள்
Ladakh · politics

சோனம் வாங்சுக் விவகாரம்: ஜனநாயகம் மீதான தாக்குதல் என ஜவாஹிருல்லா கண்டனம்

சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோனம் வாங்சுக் விவகாரம்: ஜனநாயகம் மீதான தாக்குதல் என ஜவாஹிருல்லா கண்டனம்

லடாக் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி 21 நாட்களாக அறவழியில் உண்ணாவிரதம் இருந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத மத்திய பாஜக அரசு, அதிகாரத்தைப் பயன்படுத்தி போராட்டங்களை ஒடுக்குவது ஆபத்தானது. சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்