செவிலியரின் செல்போனை திருடிய முதியவர் கைது
தனியார் மருத்துவமனையில் செவிலியரின் செல்போனைத் திருடிய முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியரின் செல்போனைத் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார். கடந்த 13-ம் தேதி செவிலியர் ரோகினி பணியில் இருந்தபோது செல்போன் திருடப்பட்டது.
மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் (67) என்பவர் செல்போனைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸார் அவரை கைது செய்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
