ETN News சமீபத்திய அப்டேட்கள்
Chennai · education

பொறியியல் பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 30 வரை மூன்று சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

பொறியியல் பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் உள்ள 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பொதுக் கலந்தாய்வு இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 30-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெறவுள்ளது.

தமிழக அரசு ஒதுக்கீட்டின்கீழ் சுமார் 1.80 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றுக்காக 2.36 லட்சம் மாணவர்கள் கலந்தாய்விற்குத் தகுதி பெற்றுள்ளனர். மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் 22-ம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஏற்கனவே 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடத்தப்பட்டு, 137 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. தற்போது பொதுக் கலந்தாய்வின் முதல் சுற்று தொடங்கி நடைபெறவுள்ளதாகச் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்