ஒரகடம் ஆலையை விரிவாக்க டைம்லர் இந்தியா ரூ.4,000 கோடி முதலீடு

ஒரகடம் பகுதியில் உள்ள தனது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக, டைம்லர் இந்தியா கமர்ஷியல் வெகிகிள்ஸ் (DICV) நிறுவனம் 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வணிக வாகனங்களின் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் உற்பத்திப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
இந்நிறுவனத்தின் வசம் ஏற்கனவே உள்ள 400 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தில் இந்த விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் மூலம், இப்பகுதியில் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மேலும் வலுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
