இந்தியாவில் ஒரே நாளில் 30 புதிய பாஷ் (Bosch) விற்பனை நிலையங்கள் திறப்பு

இந்தியாவில் தனது சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், பாஷ் (Bosch) நிறுவனம் ஒரே நாளில் 30 புதிய பிராண்ட் விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், நாடு முழுவதும் 21 நகரங்களில் உள்ள அந்நிறுவனத்தின் பிரத்யேக விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த புதிய விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பாஷ் நிறுவனத்தின் உணவு தயாரிப்பு உபகரணங்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
