சாலை விபத்தில் பகோடா கடை ஊழியர் உயிரிழப்பு
மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக் விபத்தில் பகோடா கடை ஊழியர் உயிரிழந்தார், நண்பர்கள் இருவர் காயமடைந்தனர்.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதிய விபத்தில், பகோடா கடை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நிதீஷ்குமார் (23) என்பவர் தனது நண்பர்களான லலித் குமார் மற்றும் சஞ்சய் ஆகியோருடன் முகப்பேர் நோக்கி பைக்கில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் நிதீஷ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரவாயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
