ETN News சமீபத்திய அப்டேட்கள்
Chennai · health

மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை: அரசு மருத்துவமனைகளில் முகாம்கள்

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறுகின்றன.

மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை: அரசு மருத்துவமனைகளில் முகாம்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை (UDID) பெறுவதற்கான மருத்துவ முகாம்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்றன.

ராஜீவ் காந்தி குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் அந்தந்த குறைபாடுகளுக்கான சிறப்புப் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இதுதவிர கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மையத்திலும் முகாம்கள் நடைபெறுகின்றன. மாற்றுத்திறன் இருப்பதாகக் கருதுவோர் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்