பழனி நில மோசடி: அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலம் தனியாருக்கு முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை 9.30 மணிக்கு பழனி மயில் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த நில மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக, சிபிசிஐடி விசாரணை கண்துடைப்பு என விமர்சித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்குகிறார்.
செய்தி மூலம்: OneIndia Tamil - Latest
