தெற்கு ரயில்வேயில் 3 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல்
தெற்கு ரயில்வேயில் ரூ.2,576 கோடி செலவில் மூன்று புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தெற்கு ரயில்வேயின் நெரிசல் மிகுந்த தடங்களில் கூடுதல் ரயில் பாதைகளை அமைக்கும் திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் ரூ.2,576 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4-வது புதிய பாதை அமைக்கும் திட்டம் ரூ.713 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், அரக்கோணம் - செங்கல்பட்டு மற்றும் ஈரோடு - கரூர் வழித்தடங்களிலும் புதிய இரட்டைப் பாதை மற்றும் கூடுதல் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இத்திட்டங்கள் நிறைவடையும் போது கூடுதல் ரயில்களை இயக்க வழிவகை பிறக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
