சீமை கருவேல மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற, விண்ணப்பிக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வருவாய்த்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளரை நோடல் அதிகாரியாக நியமித்துள்ள நீதிமன்றம், ஜூலை 31-க்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், மரங்களை அகற்றும் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவும், வைகோவை பின்பற்றி பொதுமக்கள் களப்பணியில் ஈடுபடவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அரசு அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு தருவதில்லை என வைகோ குற்றம்சாட்டிய நிலையில், பணிகளை விரைவுபடுத்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
செய்தி மூலம்: Tamil Indian Express - Tamil Nadu
