உரிமம் இன்றி பைக் ஓட்டிய 13 வயது சிறுவன்: தாய் மீது வழக்கு
உரிமம் இன்றி பைக் ஓட்டிய 13 வயது சிறுவனுக்கு அனுமதி அளித்த தாய் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னையில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து புளியந்தோப்பு போக்குவரத்துப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது உறுதியானது. உரிய வயது பூர்த்தியாகாத சிறுவனுக்கு பைக் ஓட்ட அனுமதி அளித்ததற்காக அவனது தாய் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அச்சிறுவன் பயன்படுத்திய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
