எலும்புகள் எல்லோருக்கும் உண்டு: திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்
முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது அமைச்சர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக்குள் முதல்வர் குறித்து தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசியதற்காக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது அமைச்சர் வன்னியரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதுவதால் ஏற்படும் விரக்தியிலேயே இத்தகைய அநாகரிகமான பேச்சுகள் வெளிப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். பேரவைக்குள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய மார்க்கண்டேயன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
