சென்னை - பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகள் அக்டோபரில் நிறைவடையும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
சென்னை - பெங்களூரு அதிவிரைவு நெடுஞ்சாலைப் பணிகள் அக்டோபர் இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான புதிய அதிவிரைவு நெடுஞ்சாலைப் பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பயண நேரம் 6-7 மணியிலிருந்து 3 மணி நேரமாகக் குறையும்.
மொத்தம் ரூ.17,700 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தில், தமிழகப் பகுதியில் 94 கி.மீ தூரத்திற்கு ரூ.7,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 230 கி.மீ தூரப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்துதல், ரயில்வே அனுமதி மற்றும் நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் எஞ்சிய பணிகள் சிறிது தாமதமாகியுள்ளன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
