தங்கம் பவுனுக்கு ரூ.120 உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது; வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,05,200-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.13,150-ஆக இருந்தது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.235 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,35,000 ஆகவும் விற்பனையானது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
