சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த இரு இளைஞர்களிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள 4 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த இரு இளைஞர்களிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளிடம் மேற்கொண்ட சோதனையில், தமிழகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களது சூட்கேஸ்களை சோதனையிட்டதில், சுமார் 4 கிலோ 76 கிராம் உயர்ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்கள் போதைப்பொருள் கடத்தும் 'குருவிகளாக' செயல்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
