குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி: 5 பேர் கைது
குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக, தந்தை மற்றும் மகன் உட்பட 5 பேரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்த வழக்கில், தந்தை-மகன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமைந்தகரையைச் சேர்ந்த அன்மோல் ஜெயின் (24) என்பவர் தங்கம் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அறிமுகமானவர்கள், குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி ரூ.63 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகினர். இதுகுறித்து அன்மோல் ஜெயின் எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
விசாரணையில், பெரம்பூரைச் சேர்ந்த சாந்தகுமார் (61), அவரது மகன் ராம் (23) உள்ளிட்ட 5 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
