வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: அமைச்சர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழைக்கால பாதிப்புகளைத் தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பணிகளைத் தினமும் கண்காணித்து, அது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
