ETN News சமீபத்திய அப்டேட்கள்
Periyamedu · crime

இளைஞரிடம் வழிப்பறி: பிரபல ரவுடி கைது

சென்னையில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை பெரியமேடு போலீஸார் கைது செய்தனர்.

இளைஞரிடம் வழிப்பறி: பிரபல ரவுடி கைது

சென்னை பெரியமேட்டில் ஒடிசாவைச் சேர்ந்தவர் முஸ்தாகிம் (21). இவர் அல்லிக்குளம் பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை அல்லிக்குளம் லிங்க் ரோடு வழியாகச் சென்றபோது, மர்மநபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினார். இது தொடர்பாக ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ரவுடி சூர்யா (27) என்பவரை பெரியமேடு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்