ஜே.எஸ்.ஆர். பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா
மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.

மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. ஜே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கு.சிவராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மன்றத்தைத் தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் தங்கள் மொழித்திறனை வெளிப்படுத்தும் விதமாக கதை தழுவிய பொம்மலாட்டம், நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். பள்ளியின் தாளாளர் எஸ். ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் மாணவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
