வேளாண் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை வேளாண் படிப்புகளுக்கான சேர்க்கை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
மொத்தம் 26,709 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 24,435 விண்ணப்பங்கள் தகுதியானவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 9-ம் தேதி முதல் இணைய வழி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்களில் பொதுப்பிரிவில் 110 பேர் தங்கள் சேர்க்கையை உறுதிப்படுத்தினர். சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 94886 35077 மற்றும் 94864 25076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
