கோயம்புத்தூரில் கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம்

கடந்த ஆண்டு மே மாதம் முதல் கோயம்புத்தூரில் போதிய மழைப்பொழிவு இல்லாத சூழல் நிலவுகிறது. கடந்த 14 மாதங்களாக இப்பகுதியில் வறட்சி நீடித்து வருவதாக வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிருஷ் எச்சரித்துள்ளார். மார்ச் மாதம் முதல் கொங்கு மண்டலத்தில் கடும் வெப்பம் நிலவுவதாகவும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் மழைப்பொழிவுக்கு வாய்ப்பு குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தால் தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படக்கூடும் என்பதால், விவசாயத் துறைக்கு பெரும் சவால்கள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் 2027-ஆம் ஆண்டின் கோடைக்காலம் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடுமையானதாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. அடுத்த கோடைக்காலத்திற்கு முன்னதாக வறட்சியின் தாக்கத்தைக் குறைக்க, வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ய வேண்டியது அவசியமாகிறது.
