கொலை வழக்கில் தலைமறைவான இளைஞர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது
2017-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கார்த்திக் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பேரூர் அருகே உள்ள வீதியில் 2017-ம் ஆண்டு கமலம் என்ற மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கார்த்திக் (39) என்பவர், 7 ஆண்டுகளுக்குப் பிறகு காந்திபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு பிணையில் வெளிவந்து தலைமறைவாக இருந்த அவர், பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்தும், சாமியார் வேடமணிந்தும் சுற்றித் திரிந்துள்ளார். நேற்று போலீஸாரால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
