அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் முதலாமாண்டு மாணவர் அறிமுக நிகழ்ச்சி
கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் 3,500-க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவர்களுக்கான 'தீக்ஷாரம்பம் 2026' அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், கல்வியின் பின்னணியில் உள்ள விழுமியங்களைப் புரிந்து கொண்டு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சேவையின் மூலம் தேச வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று மாணவர்களை வலியுறுத்தினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
