குப்பிச்சிபாளையம் பகுதிக்கு பேருந்து சேவை நீட்டிப்பு
கோவை குப்பிச்சிபாளையம் பகுதிக்கு பேருந்து சேவையை நீட்டித்து, எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.

கோவை கௌண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதிக்கு பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதிக்கான பேருந்து சேவையை நீட்டிக்கக் கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் பேருந்து சேவையை 3 கிலோமீட்டர் நீட்டிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்காக பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
