கோயம்புத்தூரில் 800-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தடுப்பூசி
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பீளமேடு, காளப்பட்டி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநகராட்சி சுகாதாரக் குழுவினர் இந்த தடுப்பூசி முகாமினை மேற்கொண்டனர்.
மாநகராட்சியின் 5, 53 மற்றும் 87 ஆகிய வார்டுகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. வெறிநோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
