கோவையில் சர்வதேச மருத்துவ ஊட்டச்சத்து மாநாடு
கோவையில் கே.ஜி. மருத்துவமனை சார்பில் நவீன மருத்துவ ஊட்டச்சத்து குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது.

கோவை கே.ஜி. மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து துறை சார்பில், 'கே.ஜி. மருத்துவ ஊட்டச்சத்து புதுப்பிப்பு 2026' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நோய் ஊட்டச்சத்து, இதய நோய்கள், நீரிழிவு, உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிந்தைய ஊட்டச்சத்து மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தலைப்புகளில் அறிவியல் அமர்வுகள் நடைபெற்றன. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
நிறுவனத்தின் தலைவர் ஜி.பக்தவத்சலம், அசோக் பக்தவத்சலம் மற்றும் நிர்வாக அறங்காவலர் வசந்தி ரகு ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த மாநாடு, துறைசார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
