கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம்
ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஆர். ஆனந்தன் தலைமை வகித்தார். ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய ஊதியம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
