கோவையில் சுதந்திர தின அலங்காரப் பொருட்கள் விற்பனை

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அலங்காரப் பொருட்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன. தேசியக் கொடி மற்றும் சுதந்திர தினத்தை மையமாகக் கொண்ட பல்வேறு அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்தப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
