சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோ ரூ.35 வரை இருக்கும்: வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு
வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, சின்ன வெங்காயத்தின் அறுவடைக்கால பண்ணை விலை கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் சந்தையில் கடந்த 15 ஆண்டுகால தரவுகளை ஆய்வு செய்து, சின்ன வெங்காயத்தின் சந்தை விலை நிலவரம் குறித்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, அறுவடை காலத்தில் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் முக்கிய பயிராக உள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் போலி விதைகள் போன்ற சிக்கல்களைக் களைந்து, விவசாயிகள் பல்கலைக்கழகம் வழங்கும் சந்தை தகவல் மையத்தின் ஆலோசனைகளை பின்பற்றி லாபகரமான முடிவுகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
