டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக கோவையில் ஆர்ப்பாட்டம்
டெல்லி போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கோவையில் வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு முற்போக்கு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் போராடுபவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட கிளை சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
