கிணத்துக்கடவில் காரை தாறுமாறாக ஓட்டிய 4 பேர் கைது
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் காரின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே காரின் மேற்கூரையில் நால்வர் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ரெட்டி உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில், காரில் பயணித்த சரவணகுமார் (24), சென்றாய பெருமாள் (24), ராகுல்குமார் (19) மற்றும் நிர்மல்குமார் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
