ஒரு டன் இளநீரின் விலை ரூ.20,250 ஆக நிர்ணயம்
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இளநீர் வரத்து குறைவால் தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஒரு டன் இளநீரின் விலை ரூ.20,250 ஆக நீடிக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இளநீர் விலை மாற்றமின்றி ஒரு டன் ரூ.20,250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், தரமான குட்டை ஒட்டு ரக இளநீரின் விலை கடந்த வாரத்தில் இருந்து ஒரு ரூபாய் அதிகரித்து 52 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பருவமழை பொய்த்ததன் காரணமாக இளநீர் விளைச்சல் குறைந்து கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வரக்கூடிய மாதங்களிலும் வரத்து குறைவாகவே இருக்கும் என்பதால் விவசாயிகள் தரமான இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
