ஆனைமலையில் ரூ.23.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடடத்தில் 179.20 குவிண்டால் கொப்பரை ரூ.23.30 லட்சத்திற்கு ஏலம் போனது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இது குறித்து விற்பனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயராமன் கூறியதாவது: ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 448 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வியாபாரிகள் முன்னிலையில் தரம் பிரித்து ஏலமிட்டதில், முதல் தர கொப்பரை 247 மூட்டை குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.14,492-க்கும், அதிகபட்சம் ரூ.15,560-க்கும் விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை 201 மூட்டை, குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,200-க்கும், அதிகபட்சம் ரூ.13,921-க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் 70 விவசாயிகள் பங்கேற்றனர். மொத்தம் 179.20 குவிண்டால் கொப்பரை ரூ.23.30 லட்சத்துக்கு ஏலம் போனது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
