ETN News சமீபத்திய அப்டேட்கள்
Madukkarai · crime

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி பிரபாகரன் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதுடன், ரசாயனம் ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் பிரபாகரன், இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்டத் துணைத் தலைவர். இவர் நேற்று இரவு மதுக்கரை அறிவொளி நகரில் உள்ள தனது தாயாரின் வீட்டை விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மேற்கு புறவழிச்சாலை அருகே வந்தபோது, மர்ம நபர்கள் இருவர் பிரபாகரன் மீது கல் வீசி தாக்கினர். அதைத் தொடர்ந்து, அவர் மீது ரசாயனம் கலந்த எரிபொருளை வீசி தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுக்கரை போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்