கோவை நீரிழிவு சிறப்பு மையத்தில் கல்லீரல் ஃபைப்ரோஸ்கேன் முகாம்
கோவையில் நான்கு ரோட்டரி சங்கங்கள் இணைந்து கல்லீரல் ஃபைப்ரோஸ்கேன் மற்றும் ஆரோக்கிய முகாமை நடத்தினர்.

சமூக நலம் மற்றும் தடுப்பு சுகாதார மேம்ாட்டிற்கான முயற்சியாக, கோவை ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஒரு பிரம்மாண்ட ரோட்டரி கிளஸ்டர் தடுப்பு ஆரோக்கிய முகாம் மற்றும் கல்லீரல் ஃபைப்ரோஸ்கேன் முகாமை ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு சிறப்பு மையத்தில் நடத்தின.
ரோட்டரி மாவட்டம் 3206-ன் கீழ் உள்ள நான்கு முன்னணி ரோட்டரி சங்கங்களான ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சைகிட்டி, டெக்ஸிட்டி, சங்கமம் மற்றும் லெஜண்ட் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின. ரோட்டரி மாவட்ட ஆளுநர், ஆர்.சி.சி சைகிட்டி தலைவர் டாக்டர் ஆர்.பாலமுருகன் மற்றும் சங்கமம் தலைவர் சக்திவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட ரோட்டேரியன்கள் பங்கேற்று குறைந்த கட்டணத்தில் மருத்துவ பரிசோதனைகளைச் செய்தனர். வாழ்வியல் நோய்களைக் கையாள்வதில் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை டாக்டர் ஆர்.பாலமுருகன் வலியுறுத்தினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
