மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஒழிக்கப்படும்: அமைச்சர் விக்னேஷ்
மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் (10 ரூபாய்) வசூலிக்கப்படும் முறையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், இந்த நடைமுறையை அடுத்த ஆண்டுக்குள் முழுமையாகக் களைந்து, மது விற்பனையை முறைப்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
