சிறுவாணி அணை நீர்மட்டம் 21.50 அடியாக உயர்வு
மழை காரணமாக கோவையின் குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை நீர்மட்டம், சமீபத்தில் பெய்த மழை காரணமாக 21.50 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், பில்லூர் அணையில் 83 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
கடந்த ஜூன் மாதம் போதிய மழையின்றி அணையின் நீர்மட்டம் 7 அடிக்கும் கீழ் சரிந்ததால், குடிநீர் விநியோகம் வெகுவாக குறைக்கப்பட்டது. தற்போது பெய்த மழையால் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு 6 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறைவே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
