சோதனை அடிப்படையில் மேம்பாலம் திறப்பு
கோவையில் சாயிபாபா காலனி அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம் சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், சாயிபாபா காலனி பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, சோதனை அடிப்படையில் மேம்பாலம் நேற்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
