வால்பாறையில் திருட்டு வழக்குகளில் பெண் உள்பட 4 பேர் கைது
வால்பாறையில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் திருடிய பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வால்பாறை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை லீலா சுலோக்சனா வீட்டில் 20 பவுன் நகை மற்றும் ரூ. 19,000 திருடு போனது. இது குறித்து அவர் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், லீலா சுலோக்சனாவின் வீட்டிலேயே வாடகைக்கு வசித்து வரும் துர்காதேவி, துளசிமணி, உதயன் மற்றும் சக்திகுமார் ஆகிய 4 பேர் திருடியது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, நகை மற்றும் பணத்தை மீட்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
