விஜயா வாசகர் வட்டம் சார்பில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருது
விஜயா வாசகர் வட்டத்தின் வருடாந்திர மொழிபெயர்ப்பு விருதுக்கு அரும்பு சுப்பிரமணியன் மற்றும் ஷாஃபி செறுமாவிலாயி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படும் மொழிபெயர்ப்பு விருதுகளுக்கு இந்த ஆண்டு அரும்பு சுப்பிரமணியன் மற்றும் ஷாஃபி செறுமாவிலாயி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்ய மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'கரமசோவ் சகோதரர்கள்' நாவலுக்காக அரும்பு சுப்பிரமணியனும், மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட 'அரத்தநாரி' நாவலுக்காக ஷாஃபி செறுமாவிலாயியும் விருது பெறுகின்றனர். தலா ரூ.50,000 பரிசுத் தொகையும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
