கோவில்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
கோவை அருகே கோவில்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவியில் பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை அருகே கோவில்பாளையம் கவுசிகா ஆற்றங்கரையில் உள்ள ஒரு தோட்டத்தில் சிறுத்தை நடமாடுவதை அந்தப் பகுதியைச் சேர்ந்த தோட்ட உரிமையாளர் சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டாலும், பொதுமக்களுக்கோ அல்லது கால்நடைகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அப்பகுதியில் வறண்டு கிடக்கும் ஆற்றுப்பாதை வழியாக சிறுத்தை வந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். இருப்பினும், அப்பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
