கடலூர்: கூட்டுறவு சங்க பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பணி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம், ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
